Header Ads

  • BREAKING



    திருச்சிராப்பள்ளி:தனியார் பூச்சிக் கொல்லி மருந்து குடோனில் தீவிபத்து.


    திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீவிபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின.
    திருச்சி மாவட்டம் அரியமங்கலத்தில் சிவா எண்டர்பிரைசஸ் என்ற பெயரில் பூச்சிக் கொல்லி மருந்து சேமிப்புக் கிடங்கு உள்ளது. கோத்ரேஜ் அக்ரோவெட் நிறுவனத்தின் பூச்சிக் கொல்லி மருந்துகள் அனைத்தும், சுற்றுவட்டார கடைகளுக்கு இங்கிருந்து தான் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.

    இந்த சேமிப்பு கிடங்கில் காலை 8 மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் சேமிப்புக் கிடங்கிற்குள் இருந்த பூச்சிக் கொல்லி மருந்து பாட்டில்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிய தொடங்கின. இதையடுத்து திருச்சி கண்டோன்மெண்ட் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து 5 வாகனங்களில் விரைந்து வந்த அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
    பூச்சிக் கொல்லி மருந்து என்பதால் காற்றில் கலந்த நச்சுப் புகை, கண் எரிச்சல், தொண்டை கரகரப்பை ஏற்படுத்தியதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் கடும் சவால்களை சந்திக்க நேரிட்டது. சுற்றுப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும் இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. கிரேன் மற்றும் பொக்லைன் உதவியுடன் சேமிப்புக் கிடங்கிற்குள் தீயை அணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
    இந்த விபத்தில் 7 கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தீவிபத்து ஏற்பட்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad