Header Ads

  • BREAKING



    மோகன்லாலை இயக்குகிறார் பீட்டர் ஹெய்ன்.


    சண்டை இயக்குனர் பீட்டர் ஹெய்ன் மோகன்லால் நடிக்கும் படத்தை டைரக்ட் செய்ய இருக்கிறார்.
    தமிழில் அந்நியன், சிவாஜி, எந்திரன், 7ஆம் அறிவு, பாலிபலி உட்பட பல்வேறு படங்களுக்கு ஸ்டன்ட் இயக்குனராக பணியாற்றியவர் பீட்டர் ஹெய்ன். இந்தி, தெலுங்கு, மலையாள படங்களிலும் பணியாற்றியுள்ளார். இவர் இப்போது பிரமாண்ட ஆக்‌ஷன் படம் ஒன்றை இயக்க இருக்கிறார். இதில் மோகன்லால் ஹீரோவாக நடிக்கிறார். இந்தியாவில் உள்ள பல்வேறு மொழி டெக்னீஷியன்கள் இதில் பங்கேற்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
    மோகன்லால் நடித்து மலையாளத்தில் வெளியான புலிமுருகன் படத்துக்கு பீட்டர் ஹெய்ன் சண்டை இயக்குனராகப் பணியாற்றி இருந்தார். இந்தப் படத்துக்காக பீட்டர் ஹெயினுக்குத் தேசிய விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad