Header Ads

  • BREAKING



    பெட்ரோல் முறைகேடு தெரியவந்தால் உரிமம் ரத்து: பங்குகளுக்கு எச்சரிக்கை.


    பெட்ரோல் பங்க்குகளில், எலக்ட்ரானிக் சிப்-களைப் பொருத்தி, முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தால், உரிமம் ரத்து செய்யப்படும் என்று பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் எச்சரித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், பெட்ரோல் போடும் பம்புகளில் மைக்ரோ சிப்பை பொருத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதன்மூலம் ஒரு லிட்டருக்கு நூறு மில்லி லிட்டர் வரை திருடப்பட்டுள்ளது. இதுகுறித்து நடத்தப்பட்ட சோதனையைத் தொடர்ந்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள் 23 பேரும், அவர்களுக்கு உதவிய 2 பொறியாளர்களும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பொறியாளர்கள், மாநிலத்தில் ஏராளமானோருக்கு “சிப்”களை விற்றது தெரியவந்துள்ளது. இதையடுத்து, உத்தரப்பிரதேசம் முழுவதும் இதுகுறித்த சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, டெல்லியிலும் பெட்ரோல் பங்க்குகளில் சோதனை நடத்தப்பட்டது. பிற மாநிலங்களிலும் சோதனை நடத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.குறிப்பிட்ட அந்த மைக்ரோ ‘சிப்’பை பெட்ரோல் வினியோகம் செய்யும் இயந்திரத்தில் பொருத்தினால், ஒரு லிட்டருக்கு, 940 மில்லி லிட்டர் பெட்ரோல் மட்டுமே வாகனத்தின் டேங்குக்கு வந்து சேரும். ஒவ்வொரு வாகனத்துக்கும் பெட்ரோல் நிரப்பும்போது, லிட்டருக்கு 60 மில்லி லிட்டர் மிச்சப்படுத்தி, பல லட்சம் ரூபாய் மோசடி அரங்கேறுகிறது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த மோசடி குறித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் உத்தரவிட்டுள்ளார். முறைகேடுகள் செய்த பெட்ரோல் பங்க்குகள் கண்டுபிடிக்கப்பட்டால், அவற்றின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அவர் எச்சத்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad