Header Ads

  • BREAKING



    பெட்ரோல்-டீசல் விலை குறைப்பு.


    பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகளும் குறைக்கப்பட்டுள்ளது.
    சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ஆகியவற்றைப் பொறுத்து இந்திய எண்ணெய் நிறுவனங்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் விலையை மாற்றி அமைத்து வருகின்றன. ஏப்ரல் 30ஆம் தேதியன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு ஒரு பைசாவும், டீசல் விலை லிட்டருக்கு 44 காசுகளும் குறைக்கப்பட்டன.

    இந்நிலையில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் குறைக்கப்பட்டிருப்பதாகவும், நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்திருப்பதாகவும் எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 16 காசுகள் குறைக்கப்பட்டுள்ளதால், சென்னையில் ஒரு லிட்டர் 68 ரூபாய் 26 காசுகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. டீசல் விலை லிட்டருக்கு 2 ரூபாய் 10 காசுகள் குறைக்கப்பட்டு 58 ரூபாய் 7 காசுகளுக்கு விற்பனையாகிறது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad