முதுநிலை மருத்துவப் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடக்கம்.
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு சென்னையில் இன்று தொடங்குகிறது. நீட் தேர்வின் அடிப்படையில் தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு, சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் நேற்று தொடங்கியது.
முதுநிலை கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த நான்காயிரத்து 555 பேரில், நான்காயிரத்து 294 பேர் தகுதி பெற்றுள்ளனர். முதல் நாளான நேற்று, மாற்றுத் திறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, இன்று பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு காலை காலை 9 மணி முதல் தொடங்குகிறது. தரவரிசைப் பட்டியலில் ஒன்று முதல் 400 இடங்களைப் பெற்றவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கப் பட்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை