வரும் கல்வி ஆண்டு முதல் +1 மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு: அமைச்சர் செங்கோட்டையன்.
வரும் கல்விஆண்டான 2017-2018 முதல் 11-ம் வகுப்புக்கும் பொதுத் தேர்வுகள் நடைபெறும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். அதற்கான அறிவிப்பாணை ஓரிரு நாட்களில் வெளியாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னையில் பள்ளிக்கல்வித்துறை வளாகத்தில் உள்ள சென்னை பாடநூல் கழகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன், இவ்வாறு தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை