Header Ads

  • BREAKING



    பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியானது - தமிழகம், புதுவையில் 92.1 % பேர் தேர்ச்சி.


    சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 12ஆம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்கான முடிவுகள் இன்றுவெளியிடப்பட்டுள்ளன.
    ப்ளஸ் டூ தேர்வு முடிவில் இனி ரேங்குகள் முறை இருக்காது என நேற்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்தது.
    தேர்வெழுதியுள்ள 9 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும் மதிப்பெண்ணுடன் கூடிய தேர்வு முடிவுகள் அவர்களின் செல்போன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் அனுப்பப்படுகிறது.
    மாநிலத்தின் தேர்ச்சி விகிதம் 92.1% என அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகளவு தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    கடந்த ஆண்டைவிட பிளஸ் டூ தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 0.7 அதிகம் ஆகும். மாணவர்கள் 89.3% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
    பொதுத் தேர்வு எழுதியவர்களில் மாணவிகள் 94.5% தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் 1813 பள்ளிகள் 100% தேர்ச்சி கொடுத்துள்ளன. இவற்றில் 292 அரசு பள்ளிகளும் அடங்கும். ப்ளஸ்-2 ரிசல்ட்டை www.tnresults.nic.inwww.dge1.tn.nic.inwww.dge2.tn.nic.in. இணையதளங்களில் பார்க்கலாம். 
    15ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்கள் தங்களுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்களது பிறந்த தேதி, பதிவெண் ஆகிய விவரங்களை அளித்து www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் 17-ந் தேதி முதல் தேர்வர்கள் தாங்கள் பயின்ற, தேர்வு எழுதிய பள்ளி, மையத்தின் தலைமை ஆசிரியர் மூலமாகவும் தங்களது தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பெற்றுக்கொள்ளலாம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது 

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad