Header Ads

  • BREAKING



    12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் மாணவ,மாணவிகளின் செல்போன் எண்ணுக்கே அனுப்பி வைக்கப்படும்.



    சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்த ஆண்டு சுமார் ஒன்பதரை லட்சம் +2 மாணவ, மாணவிகளுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தேர்வு முடிவுகள் தெரிவிக்கப்படும் என்று கூறினார். தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்ட 10 நிமிடங்களில், மாணவ, மாணவிகள் கொடுத்துள்ள செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தி வரும் என்று கூறியுள்ள அவர், தங்களின் மதிப்பெண் விவரங்களை அதன் மூலம் மாணவர்களால் தெரிந்து கொள்ள முடியும்    என்றும் தெரிவித்துள்ளார்.
    மாணவ, மாணவிகளின் சான்றிதழ்கள் மின் ஆவணக் காப்பகம் மூலம் பாதுகாக்கப்படும் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வுக்கு தயாராகும் வகையில் பாடத்திட்டம் உருவாக்கப்படும் என்றும், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குவது குறித்த பரிசீலனை கூட்டம் நாளை நடைபெற உள்ளதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கல்வி உரிமைச்சட்டம் குறித்த விழிப்புணர்வு கிராமப்புறங்களிலும் இருப்பதாக கூறிய அவர், கல்வி உரிமைச்சட்டத்தை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad