Header Ads

  • BREAKING



    புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக அறிவிப்பு.


    புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அம்மாநில நிதித்துறை வெளியிட்ட உத்தரவில், மத்திய நிதித்துறை அமைச்சகத்திடம் இருந்து வந்த சுற்றறிக்கையின்படி, புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு இந்தாண்டு ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. இந்த உயர்வு மே மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது எனவும், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான அகவிலைப்படி உயர்வு நிலுவைத் தொகை வழங்குவது தொடர்பாக தனியாக உத்தரவு விரைவில் வெளியிடப்படும் எனவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கான நிதி ஏற்கெனவே உள்ள ஒதுக்கீட்டிலேயே மேற்கொள்ளப்படும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad