Header Ads

  • BREAKING



    சென்னை திருவேற்காடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயச்சந்திரன் சஸ்பென்ட்.


    சென்னை பாடியைச் சேர்ந்த கிறிஸ்டியானா என்பவரை நேற்று முன்தினம் இரவு மதுரவாயல் 100 அடி சாலைப் பகுதியில் 2 மர்ம நபர்கள் தாக்கி 7 சவரன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். கை, கழுத்து, தலைப் பகுதிகளில் படுகாயம் அடைந்த கிறிஸ்டியானாவுக்கு அண்ணாநகர் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
    தாக்கப்பட்டு நகை பறிக்கப்பட்டது தொடர்பான கிறிஸ்டினா குடும்பத்தினரின் புகாரை வாங்க மறுத்த திருவேற்காடு குற்றப்பிரிவு ஆய்வாளர் ஜெயச்சந்திரன் நொளம்பூர் காவல் நிலையத்துக்கு செல்லுமாறு அலைக்கழித்ததாகவும், கடுமையாக பேசி விரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து கிறிஸ்டினா குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட நுண்ணறிவுப் பிரிவினர், திருவேற்காடு ஆய்வாளர் ஜெயச்சந்திரனுக்கு எதிராக அறிக்கை அளித்தனர். அதன் பேரில் ஜெயச்சந்திரனை பணியிடை நீக்கம் செய்து காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாத் உத்தரவிட்டுள்ளார். பொதுமக்களுடன் சுமுக உறவைக் கடைபிடிக்கத் தவறும் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏ.கே.விஸ்வநாத் தெரிவித்திருந்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad