புதுச்சேரி துறைமுகத்தில் 2-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை மோரா என்ற புயலாக மாறியுள்ளது.
இப்புயல் கொல்கத்தாவுக்கு 720 கிமீ தெற்கு தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் கடும் புயலாக வலுவடைந்து நாளை வங்கதேசம் அருகே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக புதுச்சேரி துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல், நாகப்பட்டினம், கடலூர், தூத்துக்குடி துறைமுகங்களிலும் 2-ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.