Header Ads

  • BREAKING



    சொத்து தகராறில் தம்பியை கழுத்தை நெரித்துக் கொலை செய்த அண்ணன்.


    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில், சொத்து தகராறில் தம்பியை அண்ணனே கழுத்தை நெரித்துக் கொலை செய்தார். தாயப்பன்நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரர் பூங்காவனம். இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இவருக்கு சுமார் ஐந்து ஏக்கரில் நிலம் உள்ள நிலையில், அவற்றை பிரித்து தரச்சொல்லி அடிக்கடி தன் தம்பி காசியிடம், அண்ணன்கள் சக்திவேல் மற்றும்மங்குண்டு பெருமாள் ஆகியோர் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

    சொத்தை பிரிக்க காசி எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். நேற்றிரவு தாய் லட்சுமியிடம் சொத்தை பிரித்து தருமாறு மங்குண்டு பெருமாள் தகராறு செய்ததாகவும், அதனை தட்டிக்கேட்ட காசியை அவர் கழுத்தை நெரித்துக் கொன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும், அவர் கொலை செய்ததை மற்றொரு சகோதரர் சக்திவேல் தடுக்காமல் நின்றதாக சொல்லப்படுகிறது. கொலை குறித்து தகவலறிந்த போலீஸார் காசியின் சடலத்தை மீட்டு, மங்குண்டு பெருமாள் மற்றும் சக்திவேல் ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad