நடிகை ரம்யாவுக்கு காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப்பிரிவுக்கு தலைமைப் பொறுப்பு.
காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணியில் நடிகை நக்மாவும், செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் நடிகை குஷ்பூவும் இருக்கும் நிலையில், நடிகை ரம்யாவை காங்கிரஸ் கட்சியின் சமூக ஊடகப் பொறுப்பாளராக ராகுல் காந்தி நியமித்துள்ளார். கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம், கிருஷ்ணாவின் பேத்தியான இவர், கட்சியின் பிரச்சாரக்கூட்டங்களில் பங்கேற்று வருகிறார். டிவிட்டரில் நடிகை ரம்யாவை சுமார் 5 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். 34 வயதான ரம்யா கன்னட திரையுலகின் முன்னணி நடிகையாகவும் விளங்குகிறார்.
கருத்துகள் இல்லை