சென்னையில் பரவலாக மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்தள்ளது.
கடந்த சில நாட்களாகவே கோடை வெயில் மக்களை வாட்டி வதைத்து வரும் நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை எழும்பூர், அண்ணாசாலை, அரும்பாக்கம், அண்ணாநகர் ராயப்பேட்டை, அடையாறு உள்ளிட்ட பல இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனம் காரணமாக சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தனியார் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
கருத்துகள் இல்லை