Header Ads

  • BREAKING



    தமிழகம் முழுவதும் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு.


    தமிழகம் முழுவதும் பெய்த பலத்த மழையால் பல இடங்களில் மரங்கள் விழுந்து போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம் கம்பம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்ததால் சாலை ஓரங்களில் இருந்த மரங்கள் சாய்ந்தன. பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்ததால் மின் இணைப்பு பாதிக்கப்பட்டது.
    திருவண்ணாமலை மற்றும் செய்யாறில் கடந்த சில மாதங்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில் நேற்று 2 மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் புழுக்கம் நீங்கி குளிர்ச்சி ஏற்பட்டதால் மக்கள் மகிழ்ந்தனர்.
    சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சூறாவளி காற்றுடன் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது.இதனால் பேருந்து நிலையத்தில் இருந்த மரங்கள் கீழே விழுந்ததால் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.
    வேலூர் மாவட்டம் திருப்பத்தூரில் சூறைக்காற்றுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக சாலைகளில் மழை நீர் ஆறாக ஓடியது.
    அதுபோல் திருப்பூர், ஈரோட்டிலும் கனமழை பெய்ததால் வெப்பம் தணிந்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad