Header Ads

  • BREAKING



    வீரலட்சுமியின் உருவபொம்மையை எரித்து ரஜினி ரசிகர்கள் ஆர்ப்பாட்டம்.


    நடிகர் ரஜினிகாந்தின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதைக் கண்டித்து, அவரது ரசிகர்கள் மதுரையில் வீரலட்சுமியின் உருவ பொம்மையை எரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
    கடந்த ஒருவாரமாக ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் தொடர்பான பேச்சுகள், அரசியல் வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் வேற்று மாநிலத்தவர் என்றும், அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்றும் கூறி தமிழர் முன்னேற்றப் படையின் தலைவர் வீரலட்சுமி தலைமையில் ரஜினிகாந்தின் வீட்டை முற்றுகையிடச் சென்றவர்கள், அவரது உருவபொம்மையை எரித்தனர்.
    இதற்கு கண்டனம் தெரிவித்து மதுரை பெரியார் நிலையம் அருகே திரண்ட ரஜினி ரசிகர் மன்றத்தினர், வீர லட்சுமியின் உருவபொம்மையை தீயிட்டு கொளுத்தினர். அப்போது அங்குவந்த போலீசார் அனைவரையும் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad