Header Ads

  • BREAKING



    மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க முதலில் நிதி ஆதாரத்தை தடுக்க வேண்டும்: ராஜ்நாத் சிங்.


    மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க அவர்களின் நிதி ஆதாரத்தை முதலில் முடக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மாவோயிஸ்ட் பாதித்த மாநில முதலமைச்சர்களுடன் டெல்லியில் நடந்த ஆலோசனையின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மாவோயிஸ்ட்டு எதிராக புதிய திட்டங்கள் திட்டப்படும் என்றார். மாவோயிஸ்ட் ஆதிக்கம் உள்ள இடங்களில் வசிக்கும் மக்களின் நம்பிக்கையை வீரர்கள் பெற பயிற்சி அளிக்கப்படும் என்று அவர் கூறினார். தேடுதல் வேட்டைக்கு ஹெலிகாப்டர் பயன்படுத்தப்படும் என்றும், மாநில அரசுகளுடன் இணைந்து திட்டங்கள் தீட்டப்படும் என்றும் அவர் கூறினார். மாவோயிஸ்ட்டுகளின் நிதி ஆதாரங்களை முடக்கினால், ஆயுத கொள்முதலை அடியோடு ஒழிக்கலாம் என நம்பிக்கை தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad