Header Ads

  • BREAKING



    ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால் திருப்பதி தேவஸ்தான கம்ப்யூட்டர்கள் முடங்கின.


    திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட்டுகள், அறைகள் ஒதுக்கீடு, நிர்வாக செயல்பாடுகள் அனைத்தும் ஆன்லைன் மூலமே செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால், திருப்பதி தேவஸ்தான அலுவலக கம்ப்யூட்டர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 30 கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்ட நிலையில், இதர கம்ப்யூட்டர்கள் ஆன்லைன் இணைப்பில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால், ஆன்லைன் மூலம் தரிசன டிக்கெட் மற்றும் அறைகளை முன்பதிவு செய்ய முடியாமல் பக்தர்கள் தவிப்புக்குள்ளாயினர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், 300 ரூபாய் டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்களுக்கும், ஆர்ஜித சேவை டிக்கெட் பெற்றவர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என்று தெரிவித்தார். ரேன்சம்வேர் வைரஸ் தாக்குதலால், பக்தர்களுக்கு சாதாரண முறையில் தரிசன டிக்கெட், அறைகள் ஒதுக்கீடு ஆகியவை நடைபெறுவதாக கூறிய அவர், எதிர்காலத்தில் இதுபோன்ற தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள கம்ப்யூட்டர் வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருவதாக தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad