Header Ads

  • BREAKING



    கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபர் கைது.


    திருச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக ரியல் எஸ்டேட் அதிபரை போலீஸார் கைது செய்தனர். திருச்சி – உறையூர் சாலையில் முருகேசன் என்பவர், ஜி.எம்.ஜி. ரியல் எஸ்டேட் மற்றும் நிதி நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தவணை முறையில் நிலம் மற்றும் நிதி நிறுவனத்திற்கு பணம் செலுத்தியுள்ளனர். இந்நிலையில், பணத்தை செலுத்தியவர்களுக்கு நிலத்தை வழங்காமல் உரிமையாளர் முருகேசன் ஏமாற்றியதாக புகார் எழுந்தது. மேலும், நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தியவர்களிடமும் அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி, நூற்றுக்கும் மேற்பட்ட மோசடி புகார்கள் பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு பொதுமக்கள் அனுப்பியுள்ளனர். அவற்றை விசாரித்த காவல் துறையினர், முருகேசன் இரண்டரை கோடி ரூபாய் மோசடி செய்ததை உரிய ஆவணங்களுடன் உறுதி செய்து அவரை கைது செய்தனர். நூறு கோடி ரூபாய்க்கும் மேல் முருகேசன் மோசடி செய்திருக்கலாம் என போலீஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad