Header Ads

  • BREAKING



    அனாதை பிணங்கள் தனியாருக்கு விற்கப்பட்டதா? வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு.


    இந்திய செஞ்சிலுவைச் சங்கத்தின் நெல்லை பிரிவில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து, வழக்கறிஞர் பிரம்மா என்பவர் தகவல் உரிமைச் சட்டத்தின் மூலம் கேள்வி எழுப்பியிருந்தார்.
    அவருக்கு கிடைத்த தகவலின்படி, மனநலம் பாதிக்கப்பட்டு சாலைகளில் சுற்றித் திரிந்த நபர்களை மீட்டதாக கூறி, மாவட்ட மாற்றுதிறனாளி அலுவலகம் மூலம், நபர் ஒருவருக்கு 1,500 ரூபாய் வீதம் செஞ்சிலுவை சங்கத்தினர் பெற்றதாகவும், உண்மையில் மன நலன் பாதிக்கப்பட்ட யாரையும் அவர்கள் மீட்கவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    நெல்லை செஞ்சிலுவை சங்கத்தின் கீழ்தான், மாநகர் பகுதியில் தகன எரிவாயு மேடை செயல்பட்டு வருகிறது. இதில், 2014-ம் ஆண்டு முதல் 2015-ம் ஆண்டுவரை 103 உடல்கள் எரிக்கப்பட்டதாக கணக்கு காட்டப்பட்டதாகவும், ஆனால், அவற்றுக்கு ஆவணமும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இதன் மூலம், அனாதை பிணங்களை தனியார் மருத்துவக் கல்லூரி ஆய்வுக்காக பல லட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் புகார் எழுந்துள்ளது.
    இறந்த பின் எரிக்கப்பட்டதாக கூறப்படுபவர்கள் உண்மையில் இறந்தவர்களா என்பதைக்கூட கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு குழப்பங்கள் இருப்பதாகவும், வழக்கறிஞர் பிரம்மா கேள்வியெழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் மீது எந்த நடவடிகையும் எடுக்கப்படாததால், வழக்கறிஞர் பிரம்மா தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், இது குறித்து வழக்கு பதிவு செய்யும்படி காவல்துறைக்கு நெல்லை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad