Header Ads

  • BREAKING



    ரியோ ஒலிம்பிக்கில் வழங்கப்பட்ட பதக்கங்கள் துருப்பிடிப்பதாகப் புகார்.


    ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு வழங்கப்பட்ட பதக்கங்கள், துருப்பிடித்து உதிர்வதாக தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ நகரில் கோடைகால ஒலிம்பிக் நடைபெற்றது.
    இதில் 307 தங்கப்பதக்கம், 306 வெள்ளிப்பதக்கம் மற்றும் 359 வெண்கலப் பதக்கம் என மொத்தம் 972 பதக்கங்கள் வீரர், வீராங்கனைகளுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இந்தப் பதக்கங்கள் தற்போது துருப்பிடிப்பதாகவும், துகள், துகளாக உதிர்ந்து விழுவதாகவும் வீரர்கள் தரப்பில் இருந்து புகார் எழுந்துள்ளது. பதக்கங்களில் கரும்புள்ளிகள் தோன்றுவதாகவும் வீரர்கள் தரப்பில் இருந்து புகார் கூறப்பட்டுள்ளதுடன், 100க்கும் மேற்பட்ட பதக்கங்கள் ரியோ ஒலிம்பிக் ஏற்பாட்டாளர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad