Header Ads

  • BREAKING



    வேலூர்:வீதிக்கு வந்த பேஷன் ஷோ.



    நட்சத்திர ஓட்டல்களிலும், மால்களிலும் வலம் வந்த மாடல் அழகிகளின் பேஷன் ஷோ வீதிக்கு வந்திருக்கிறது. கடிகாரகடை ஒன்றை பிரபல படுத்த வேலூர் அருகே சாலையை ஆக்கிரமித்து நடத்தப்பட்ட கவர்ச்சி உடை அணிந்த அழகிகளின் பூனை நடையால் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
    வேலூர் அடுத்த திருப்பத்தூர் அருகே கடிகாரகடை ஒன்றை பிரபலப்படுத்த மாடல் அழகிகளின் பேஷன் ஷோவிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். வழக்கமாக நட்சத்திர ஓட்டல்களிலும் ,பெரிய மால்களில் மட்டுமே நடக்க கூடிய பேஷன் சோ சாலையில் அரங்கேறியது.
    அந்த கடைக்கு வெளியே சாலையை ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த மேடையில் கடிகாரத்தை பிரபலப்படுத்துவதாக கூறி மாடல் அழகிகள் வலம் வர கூட்டம் முண்டியடித்தது.
    முதலில் கவர்ச்சியாக சேலை அணிந்து வலம் வந்த அழகிகள் ஒரு கட்டத்தில் ஆடைகளை குறைத்துக்கொண்டு மாடல் உடையுடன் மேடையில் வலம் வந்ததால் அங்கு இளைஞர் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக ரசித்தனர் .
    ஒருகட்டத்தில் அங்கு போக்குவரத்து ஸ்தம்பிக்கவே அதனை சரி செய்ய வந்த போலீசாரும் பேஷன் சோவை வாய் பிளந்து ரசிக்க தொடங்கினர்.
    கோவில் விழாக்களில் கவர்ச்சி நடனத்துக்கு தடைவிதித்துள்ள மாவட்ட காவல்துறையினர் சாலையில் கவர்ச்சியான பேஷன் சோ நடத்த தனியார் வியாபார நிறுவனத்துக்கு மட்டும் எப்படி அனுமதி வழங்கினர் ? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad