Header Ads

  • BREAKING



    போலீஸார் போல் நடித்து ஆட்டோ ஓட்டுநரிடம் வழிப்பறி முயற்சி – 5 பேரை கைது.


    திருப்பூர் அருகே, போலீஸார் போல் நடித்து வழிப்பறியில் ஈடுபட முயற்சித்த 5 பேர் கைது செய்யப்பட்டனர். பெருமாநல்லூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் மணிகண்டன், கருக்கங்காட்டுப்புதூர் பகுதியில் ஆட்டோ ஓட்டிச் சென்றுள்ளார். அப்போது, காக்கி உடையணிந்து வந்த 5 பேர், ஆட்டோவை வழிமறித்து தாங்கள் போலீஸார் எனக்கூறி ஆவணங்களை கேட்டுள்ளனர். அதை சரிபார்த்துவிட்டு, ஆட்டோ ஓட்டுநரிடம் பணம் கேட்டு மிரட்டியதாக கூரப்படுகிறது.
    அந்நேரத்தில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அவ்வழியே சென்றபோது, காக்கி உடையணிந்தவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவர்களிடம் விசாரணை செய்ததில்,அவர்கள் போலீஸார் போல் நடித்து, திருப்பூர் தவிர பல மாவட்டங்களில் வழிப்பறி உள்ளிட்ட குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதையடுத்து 5 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad