Header Ads

  • BREAKING



    ரஷ்யாவில் வழக்கத்தை விட அதிகமான பனிப்பொழிவு – மக்கள் அவதி.


    ரஷ்யாவில் வழக்கத்தைவிட அதிகமாக கடும் பனிப்பொழிவு நிலவி வருவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் வழக்கமாக மே மாதங்களில் பனிப்பொழிவு நிலவும். இந்த ஆண்டு பருவநிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும், மே மாதத்தில் இதுவரை அதிகபட்சமாக 8 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகி இருப்பதாகவும் ரஷ்ய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பனிப்பொழிவு என்பது ரஷ்ய மக்களுக்கு புதிதல்ல என்றபோதும், அளவின்றி பெய்து வரும் பனிப்பொழிவால் அவர்கள் தவித்து வருகின்றனர். மேலும், 2-ம் உலகப்போரில் ஜெர்மனியை ரஷ்யா வெற்றி கொண்டதன் நினைவாக, மாஸ்கோ நகரின் செஞ்சதுக்கத்தில் இன்று நடைபெறும் அணிவகுப்பு நிகழ்ச்சி பாதிக்கப்படக் கூடும் என்றும் ரஷ்ய மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad