Header Ads

  • BREAKING



    மிக சக்தி வாய்ந்த ஏவுகணையை தயாரித்த ரஷ்யா.


    உலக நாடுகளை எச்சரிக்கும் வகையில், சக்தி வாய்ந்த ஏவுகணையை ரஷ்யா தயாரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆர் எஸ் 28 சர்மத் என்ற அந்த ஏவுகணை 18 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கும் திறனுடையது. பல்வேறு பாகங்களை கொண்ட இதில், தலா 750 கிலோ எடையில், 15 ஆயுதங்கள் வரை பொறுத்த முடியும். அதிநவீன தொழில்நுட்பத்துடன் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணையை அமெரிக்க ராணுவத்தால் கூட, இடைமறிக்க முடியாது என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு அந்நாட்டு ராணுவத்தில் ஆர் எஸ் 28 சர்மத் ஏவுகணை இணைக்கப்பட உள்ளதாக தகவல் வந்துள்ளது. ரஷ்ய ராணுவத்தில் எஸ் எஸ் 18 சதன் என்னும் ஏவுகணை சக்தி வாய்ந்த ஏவுகணையாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad