Header Ads

  • BREAKING



    சேலம் கிச்சிபாளையத்தில் கொள்ளையடிக்கப்பட்ட 700 சவரன் தங்க நகைகள் மீட்பு.


    சேலம் அருகே, பெண் தொழிலதிபர் வீட்டில் கொள்ளையடித்த இருவரை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 700 சவரன் தங்க நகைகளை மீட்டனர். கிச்சிப்பாளையம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த விஜயலஷ்மி, சேலம் செவ்வாய்பேட்டை பகுதியில் இரும்பு வியாபாரம் செய்துவருகிறார். இவர் கடந்த 30-ஆம் தேதி குடும்பத்துடன் திருப்பதி கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது வீட்டில் அவருடைய வயதான பெற்றோர் மட்டுமே இருந்துள்ளனர். இன்று காலையில், வீடு திரும்பியபோது இரண்டாவது தளத்தில் உள்ள பீரோ திறக்கப்பட்டு அதிலிருந்த 2 லட்ச ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. மேலும், தரைத்தளத்தில் உள்ள பீரோவும் திறக்கப்பட்டு, அதிலிருந்த 700 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது. தகவலறிந்த போலீஸார் 6 தனிப்படைகள் அமைத்து கொள்ளையர்களைத் தேடி வந்தனர். விசாரணையில் விஜயலட்சுமியின் தம்பியான பாஸ்கர், மற்றும் அழகாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி என்ற சாமியாரும் இணைந்து கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 700 சவரன் தங்க நகைகளை மீட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad