Header Ads

  • BREAKING



    பனிப்பொழிவால் காஷ்மீரானது ஏற்காடு அடிவாரம்.


    சேலம் ஏற்காடு மலை அடிவாரத்தில் பனி பொழிந்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கும் சூழலிலும், சேலத்தில் மட்டும் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று அங்கு ஆலங்கட்டி மழை பெய்தது. இது மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில், மேலும் ஒரு ஆச்சர்யமாக அங்கு பனி பொழிந்துள்ளது. அதிகாலையில் ஏற்காட்டில் இருந்து சேலம் திரும்பிய பயணிகளுக்கு சாலையோரத்தில் பனிபொழிந்து இருந்ததைக் கண்டு ஒரே ஆச்சர்யம். சாலையோரத்திலும், தோட்டங்களிலும் பொழிந்து கிடந்த பனியை, ஒருவர் மீது ஒருவர் வீசி எறிந்து மகிழ்ந்தனர். வரலாற்றில் முதல் முறையாக காஷ்மீரைப் போல் ஏற்காடு அடிவாரத்தில் கிடந்த பனியை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துச் சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad