போலி ஆவணங்கள் மூலம் இயங்கி வந்த மூன்று ஆம்னி பேருந்துகள் பறிமுதல்.
சேலத்தில் போலி ஆவணங்கள் மூலம் இயங்கி வந்த மூன்று ஆம்னி பேருந்துகளை போக்குவரத்து துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஈரோட்டில் இருந்து சென்னைக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த சொகுசு பேருந்தை போக்குவரத்து துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். பேருந்தின் ஆவணங்கள் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருந்ததால், சந்தேகம் அடைந்த அதிகாரிகள் பேருந்தின் சேஸ் நம்பரை சோதனை செய்தனர். சோதனையில் ஆவணத்தில் இருந்த பதிவு எண்ணும் வண்டியில் இருந்த பதிவு எண்ணும் மாறி இருந்ததை அதிகாரிகள் கண்டு பிடித்தனர். இதுகுறித்து பேருந்தின் உரிமையாளரிடம் விசாரணை நடத்தியதில், ஒரே ஒரு பேருந்தின் ஆவணத்தை வைத்து 3 ஆம்னி பேருந்துகளை இயக்கி வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த மூன்று ஆம்னி பேருந்துகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கருத்துகள் இல்லை