Header Ads

  • BREAKING



    அன்னியச் செலாவனி மோசடி வழக்கில் காணொலி காட்சி மூலம் ஆஜராகிறார் சசிகலா


    அந்நிய செலாவணி மோசடி வழக்கில், பெங்களூர் சிறையில் உள்ள சசிகலா, வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆஜராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பரணி பீச் ரிசார்ட் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் மூலம் ஹவாலா பணப்பரிமாற்றம், தொழில்நுட்பத் தளவாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக சசிகலா, தினகரன் மற்றும் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கத்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். 1997ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டு, 21 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த வழக்கு, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் இறுதி விசாரணையை எட்டியுள்ளது. இந்த வழக்கில், டி.டி.வி.தினகரன் ஏற்கெனவே ஆஜரான நிலையில், இன்று பாஸ்கரன் ஆஜரானார். அப்போது, சாட்சிகளை குறுக்கு விசாரணை நடத்த வேண்டும் பாஸ்கரன் தரப்பு விடுத்த கோரிக்கையை ஏற்ற நீதிபதி, வரும் 10ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணை நடைபெறும் என்று தெரிவித்தார். இந்நிலையில், இந்த வழக்கு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதால், சசிகலா நேரில் ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது, சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெபற்று சசிகலா பெங்களூர் சிறையில் இருப்பதை சுட்டிக்காட்டிய அவரது தரப்பு வழக்கறிஞர், சசிகலாவின் உடல்நிலை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரினார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி ஜாகீர் உசேன், வீடியோ கான்பரன்சிங் மூலம் சசிகலா ஆஜராக உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணை 2 வாரத்தில் தொடங்கும் என்று கூறிய நீதிபதி, கர்நாடக உள்துறை மற்றும் சிறைத்துறையில் அனுமதி பெற்று ஆஜராக உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad