Header Ads

  • BREAKING



    ATM- பணம் எடுத்தால் சேவைக் கட்டணம், சுற்றறிக்கையில் தவறு -SBI விளக்கம்.


    எஸ்பிஐ ஏடிஎம்-மில் பணம் எடுத்தால், ஒவ்வொரு முறையும் 25 ரூபாய் சேவைக் கட்டணம் வசூலிக்கப்படும் என்று அறிவிப்பு தவறுதலாக வெளியிடப்பட்டதாக அந்த வங்கி விளக்கம் அளித்துள்ளது.
    செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.ஐ. நிர்வாக இயக்குநர் ரஜ்னிஷ் குமார், வங்கி மொபைல் வாலட்டுகளில் இருந்து ஏ.டி.எம்.கள் மூலம் பணம் எடுக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
    இத்தகைய பரிவர்த்தனை ஒன்றுக்கு 25 ரூபாய் கட்டணமாக விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த அவர், வழக்கமான ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தில் மாற்றமில்லை என்று கூறினார்.இது தொடர்பாக ஏற்கனவே வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் தவறுகள் நேர்ந்துவிட்டதாகக் கூறிய அவர் திருத்தப்பட்ட சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்றார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad