Header Ads

  • BREAKING



    வீட்டுக்கடனுக்கான வட்டியை 0.25% வரை குறைத்தது எஸ்.பி.ஐ. வங்கி.


    வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதத்தை பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதம் வரை குறைத்துள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ., வீட்டுக் கடன்களுக்கு 8 புள்ளி ஆறு என்ற சதவீத வட்டியை வசூலித்து வந்த நிலையில், தற்போது வட்டி விகிதத்தை குறைத்துள்ளது. 30 லட்சம் ரூபாய் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு பூஜ்யம் புள்ளி இரண்டு ஐந்து சதவீதமும், 30 லட்ச ரூபாய்க்கு அதிகமான கடன்களுக்கு பூஜ்யம் புள்ளி ஒன்று என்ற சதவீதமும் வட்டி குறைக்கப்பட்டுள்ளதாக எஸ்.பி.ஐ. வங்கி கூறியுள்ளது. 75 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வீட்டுக் கடன்களுக்கு 8 புள்ளி ஆறு என்ற சதவீத வட்டியே தொடரும் எனவும், வட்டிக்குறைப்பு நடவடிக்கை நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாகவும் எஸ்.பி.ஐ. வங்கி தெரிவித்துள்ளது. வீட்டுக்கடன் பெறுவோர் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் விண்ணப்பித்து, 2 லட்சத்து, 67 ஆயிரம் ரூபாய் மானியம் பெறலாம் என்றும் எஸ்.பி.ஐ. வங்கி அறிவித்துள்ளது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad