கோடை விடுமுறையில், அனைத்து மாவட்டங்களிலும், பள்ளி வாகனங்கள் ஆய்வு.
ஆய்வுக்கு வராத பள்ளி வாகனங்களை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று மோட்டார் வாகன ஆய்வாளர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பள்ளி வாகனங்களின் தகுதிச் சான்று நடப்பில் உள்ளதா? என்பது உள்ளிட்டவை ஆய்வு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மூலம் நடக்கும் இப்பணிகள் வரும் 31ந்தேதியுடன் நிறைவடைவதால், அனைத்து பள்ளி வாகனங்களும் ஆய்வுக்கு கொண்டுவர வேண்டுமென கூறப்பட்டுள்ளது. ஆய்வுக்கு உட்படுத்தப்படாத வாகனங்களை வரும் ஜுன் ஒன்றாம் தேதிக்கு பின் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.
கருத்துகள் இல்லை