Header Ads

  • BREAKING



    சேகர் ரெட்டியின் ரூ.34 கோடி சொத்துக்களை முடக்கியது அமலாக்கத்துறை.


    சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.34 கோடி சொத்துகளை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    தொழிலதிபர் சேகர் ரெட்டி, அவரது கூட்டாளிகள் சீனிவாசலு, ராமச்சந்திரன், ரத்தினம், பிரேம்குமார் ஆகியோர் வீடுகளில் கடந்த டிசம்பர் மாதம் 8 -ஆம் தேதி வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி ரூ.147 கோடி பணத்தையும், 178 கிலோ தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். இதில் ரூ.34 கோடி புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
    இதுதொடர்பாக அமலாக்கத் துறையும், சிபிஐயும் வழக்குப் பதிவு செய்து, சேகர் ரெட்டியையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சேகர் ரெட்டிக்கு பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை, புதிய இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகளாக கமிஷன் அடிப்படையில், சென்னை பெரியமேடு சென்டாம்ஸ் சாலை பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர்கள் மகாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகியோர் மாற்றிக் கொடுத்தது தெரியவந்தது. இதையடுத்து வருமானவரித் துறையினர், அவர்கள் இருவர் வீட்டிலும் அதே மாதம் 19 -ஆம் தேதி சோதனை நடத்தி பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் ரூ.10 கோடியும், 6.5 கிலோ தங்கநகைகளையும் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் அமலாக்கத் துறையினர் வழக்குப் பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.
    அவர்களிடம் நடத்திய விசாரணையில் சேகர் ரெட்டிக்கு அவர்கள் ரூ.7 கோடிக்கு பழைய ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொடுத்திருப்பது தெரியவந்தது.
    இந்நிலையில், சேகர் ரெட்டிக்கு சொந்தமான ரூ.34 கோடி சொத்துக்களை முடக்கி அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
    மஹாவீர் ஹிரானி, அசோக் எம்.ஜெயின் ஆகியோருக்கு சொந்தமான ரூ.12 கோடி சொத்துகளையும் சோதனையின்போது பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.80 கோடி மதிப்புள்ள 6.5 கிலோ தங்கநகைகளையும் அமலாக்கத் துறை கடந்த மாதம் 23-ஆம் தேதி புதன்கிழமை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad