Header Ads

  • BREAKING



    சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டிக்கு நிபந்தனை அடிப்படையில் ஜாமீன்.



    சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சேகர் ரெட்டி மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2016 ல் தொழிலதிபர் சேகர் ரெட்டி அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான இடங்களில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக 5 பேரை சிபிஐ காவல்துறையினர் கைது செய்தனர்.இந்நிலையில் சிபிஐயால் கைதான சேகர் ரெட்டிக்கு ஜாமீன் கிடைத்த நிலையில், சட்டவிரோத பணபரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் அமலாக்கப்பிரிவினர் அவரை கைது செய்தனர்.
    இந்நிலையில், அவர்களது மனுவை ஏற்ற நீதிபதி பாஸ்கரன், சேகர் ரெட்டி, சீனிவாசலு, ஆடிட்டர் பிரேமுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார். ஜாமீன் பெற்ற மூவரும் தினமும் காலை 10 மணிக்கு அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். அதேசமயம் அவரது கூட்டாளிகள் திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் ராமச்சந்திரனுடைய முன்ஜாமீன் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad