Header Ads

  • BREAKING



    பள்ளி மாணவியைக் கடத்திச்சென்று பலாத்காரம் செய்ய முயற்சி – 4 பேரைப் பிடித்து தர்மஅடி கொடுத்த மக்கள்.


    திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பள்ளி மாணவியைக் கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 4 பேருக்கு கிராம மக்கள் தர்மஅடி கொடுத்தனர். செங்கம் அருகே அந்தனூர் கிராமத்தில், தண்டம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 6 பேர் விறகுவெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்று தனியாக நிலத்திற்கு சென்றபோது, ஏழுமலை, சின்ராஜ், சரவணன், குமார் ஆகிய 4 பேர் அவரது வாயில் துணியை வைத்து கடத்திச் சென்றுள்ளனர். இதைக் கண்ட மூதாட்டி ஒருவர் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, மாணவியை விட்டு விட்டு அவர்கள் தப்பினர். பின்னர் அந்த 4 பேரையும் தேடிப்பிடித்த கிராம மக்கள், அவர்களுக்கு தர்மஅடி கொடுத்தனர். பெண்கள் துடைப்பத்தால் அடித்ததோடு, மண்டியிட்டு நடக்க வைத்தனர். இதுதொடர்பாக மேல்செங்கம் காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்கப்பட்டு போலீசாரிடம் அவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad