Header Ads

  • BREAKING



    சென்செக்ஸ் 30 ஆயிரத்து 200 புள்ளிகளை தாண்டி இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்.


    வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் வரலாற்றில் புதிய உச்சமாக 315 புள்ளிகள் உயர்ந்து 30 ஆயிரத்து 246 புள்ளிகளில் நிறைவடைந்தது. அதே போன்று தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 89 புள்ளிகள் அதிகரித்து முதன் முறையாக 9 ஆயிரத்து 406 புள்ளிகளை எட்டியது. நடப்பு ஆண்டில் பருவமழை வழக்கம் போல் இருக்கும் என்றும் 100 சதவீதம் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தததன் எதிரொலியாக முதலீட்டாளர்கள் பங்குகளை அதிக அளவில் வாங்கியதே பங்குச்சந்தை உயர்வுக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
    நிறுவனங்களின் 4வது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருப்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது. பார்தி எர்டெல், ஹிந்துஸ்தான் யூனிலிவர், எச்டிஎப்சி, ரிலையன்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்டவற்றின் பங்குகள் இன்றைய வர்த்தகத்தில் விலை அதிகரித்தது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad