தன்னிடம் உள்ள பத்தாயிரம் ரூபாய்க்கு புதிய நோட்டுக்களை வழங்குமாறு பிரதமருக்கு கோரிக்கை வைத்த பாலியல் தொழிலாளிக்கு பலர் புதிய ரூபாய் நோட்டுக்களை அனுப்பி உதவி வருகின்றனர். மகாராஷ்டிர மாநிலம் பூனாவில், பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட வங்கதேச நாட்டைச் சேர்ந்த அருணா என்ற இளம்பெண், பழைய 1000, 500 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற அறிவிப்பு தனக்கு தெரியாது என்றும், தன்னிடம் சிறுசேமிப்பாக உள்ள பத்தாயிரம் ரூபாய்க்கு புதிய நோட்டுகள் வழங்குமாறும் ட்விட்டர் மூலம் பிரதமருக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து இதுவரை எந்த பதிலும் தரப்படாத நிலையில், அவர் தன் நாட்டிற்குத் திரும்பி நல்வாழ்க்கை வாழவும், தன் பெற்றோரை கவனித்துக்கொள்ளவும் பலர் அவருக்கு பணம் அனுப்பி இந்தியர்கள் மனிதாபிமானத்தில் சிறந்தவர்கள் என்பதை நிரூபித்து வருகின்றனர்.
கருத்துகள் இல்லை