Header Ads

  • BREAKING



    திண்டுக்கல்:சுயஉதவிக் குழு கடனை வசூலிப்பதில் முறைகேடு நடந்ததாக 159 பேர்மீது வழக்கு.



    திண்டுக்கல் மாவட்டத்தில், சுயஉதவிக் குழுக்களுக்கு வழங்கிய கடனை வ
    சூல் செய்ததில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, கூட்டுறவு வங்கி அதிகாரிகள் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
    திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் கடந்த 2008 முதல் 2014 வரை சுய உதவிக்குழுக்கள், தனி நபர்களுக்கு ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்பட்டது. இதில் சுய உதவிக்குழுக்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட கடன் தொகையை வங்கிக்கு செலுத்தாமல் மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்தது. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர் மணிகண்டன் அளித்த புகாரைத் தொடர்ந்து, திண்டுக்கல் மாவட்ட வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசார், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளர் மணவாளன், துணை பொதுமேலாளர்கள் 4 பேர் உள்ளிட்ட 159 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே, வங்கியின் துணைப் பொது மேலாளர்கள் மகேஸ்வரி, கவுசர் பானு, மேலாளர் குணசேகரன் மற்றும் கலைமகள் அறக்கட்டளை உரிமையாளர் மணிவேல் ஆகிய 4 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவான பொதுமேலாளர் மணவாளன், துணைப் பொது மேலாளர்கள் நல்லபெருமாள், ஜெயராமன் உள்ளிட்ட 155 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad