Header Ads

  • BREAKING



    புதிய கட்சியை தொடங்கினார் உ.பி. முன்னாள் அமைச்சர் சிவ்பால் சிங்.


    சமாஜ்வாதி கட்சியின் நிறுவனத் தலைவரான முலாயம் சிங் யாதவின் தம்பி சிவ்பால் சிங் புதிய கட்சி ஒன்றை தொடங்கினார். மதச்சார்பற்ற சமாஜ்வாதி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கட்சியின் தலைவராக முலாயம் சிங் யாதவ் இருப்பார் என்று அவரது தம்பியும், உத்தரப்பிரதேச மாநில முன்னாள் அமைச்சருமான சிவ்பால் சிங் யாதவ் அறிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சரும், முலாயம் சிங்கின் மகனுமான அகிலேஷ் யாதவுக்கும், சிவ்பால் சிங்குக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் சமாஜ்வாதி கட்சி பிளவுபட்டதுடன், சட்டப்பேரவை தேர்தலிலும் அக்கட்சிக்கு பலத்த அடி விழுந்தது. இதனால் விரக்தியில் இருந்த சிவ்பால் சிங் யாதவ் தற்போது புதிய கட்சிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முலாயம் சிங் யாதவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் அவரை கட்சியின் தலைவர் ஆக்கியிருப்பதாக சிவ்பால் சிங் தெரிவித்துள்ளார்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad