Header Ads

  • BREAKING



    வங்கிப் பணம் எடுத்துச் செல்லும் வாகனத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் பலி.


    தெற்கு காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் இருந்து பணத்தை எடுத்துக் கொண்டு, நெகாமா கிராமத்தில் பணத்தை இறக்கியதும் அங்கிருந்து மீண்டும் குல்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போது பொம்பை கிராமத்திற்கு அருகே தீவிரவாதிகள் திடீர் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.அதில் 2 வங்கி அதிகாரிகள், 5 காவலர்கள் உள்பட 7 பேர் பலியாகினர். 5 எஸ்.எல்.ஆர்.ரக துப்பாக்கிகளும் தீவிரவாதிகளால் கொள்ளையடிக்கப்பட்டன. வங்கியின் வாகனத்தில் ஏராளமான போலீசார் பயணித்ததாகவும் கூறப்படுகிறது. பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறியதில் 2 வீரர்கள் கொல்லப்பட்ட நிலையில் குல்கமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad