Header Ads

  • BREAKING



    தென்கொரியாவின் புதிய அதிபரானார் 64 வயது மூன்-ஜே-இன்.


    தென்கொரியாவின் புதிய அதிபராக மூன்-ஜே-இன் பதவி ஏற்றுக்கொண்டார். வடகொரியாவுடன் நட்புறவையே விரும்புவதாகவும் விரைவில் அந்நாட்டிற்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடப்போவதாகவும் மூன் ஜே தெரிவித்துள்ளார்.
    இதற்கு முன்பு தென்கொரியாவை ஆட்சிசெய்த கன்சர்வேட்டிவ் கட்சியின் தவறான கொள்கைகளால் ஊழல் மலிந்து காணப்பட்டதாகவும், வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடியில் இருந்து தென்கொரியாவை மீட்டெடுக்கப் பாடுபடப்போவதாகவும் புதிய அதிபர் தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளரான 64 வயதான மூன்- ஜே, கடந்த இருபது வருடங்களில் யாரும் பெறாத அளவில் 41 சதவீத வாக்குகள் பெற்று அபார வெற்றிபெற்று பதவி ஏற்றுள்ளார்.
    தென்கொரியாவில் மாற்றத்தை ஏற்படுத்துவார் என்றும் மக்களின் மனதைப் பிரதிபளிக்கும் அதிபராக இருப்பார் என்றும் பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad