பள்ளி மாணவர்களுக்கு விரைவில் முழுவிவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டு:செங்கோட்டையன்.
பள்ளி மாணவர்களுக்கு முழுவிவரங்கள் அடங்கிய ஸ்மார்ட் கார்டுகள், விரைவில் வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள 62 ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், பங்கேற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை தியாகராய நகரில் உள்ள சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்று ஆசிரியர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அரசு பள்ளிக் குழந்தைகளுக்கான சீருடைகளின் நிறத்தை மாற்றுதல், காலிப்பணியிடங்களை நிரப்புதல், தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்குதல், தாராபுரம், திருச்செங்கோடு, அரூர், ஆத்தூர் ஆகிய பகுதிகளை புதிய கல்வி மாவட்டங்களாக உருவாக்குதல் உள்ளிட்ட கோரிக்கைகளை ஆசிரியர்கள் முன் வைத்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், மாற்றுச் சான்றிதழ் இல்லாமல் வேறு ஒரு பள்ளியில் சேருவதற்கு உதவியாக ஸ்மார்ட் கார்டுகள் வழங்கப்படும் என்று கூறினார். பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அனைத்து கோரிக்கைகளும் ஆலோசித்து தீர்க்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை