Header Ads

  • சற்று முன்



    காஷ்மீரின் மொகாலய சாலை பனிப்பொழிவால் மூடப்பட்டது.


    கடும் பனிப்பொழிவு காரணமாக ஜம்மு காஷ்மீரின் பிரதான சாலை ஒன்று மூடப்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணி வகுத்து காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களை இணைக்கும் மொகாலய சாலையில்தான் புதிய பனிமழை பெய்துள்ளது. எல்லையை ஒட்டிய இந்தப் பகுதியில் பனிப்பொழிவு அதிகமாக இருந்ததால் கடந்த நான்கு மாதங்களாக இந்த சாலை மூடப்பட்டிருந்தது. அண்மையில் சாலை திறக்கப்பட்டு பனி அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் பனிப்பொழிவு காணப்படுவதால் சாலை மூடப்பட்டுள்ளது. இதனிடையே இமாச்சலப் பிரதேசத்திலும் புதிய பனிப்பெய்து வருகிறது.இப்பகுதிகளில் கடும் குளிரும் நிலவுகிறது. பல மாநிலங்கள் கோடையின் வெப்பத்தில் தகித்து வரும் நிலையில் இங்கு மக்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கின்றனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad