Header Ads

  • BREAKING



    பயிர்களில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் சோலார் விளக்குகள்.


    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் காய்கறி செடிகளில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் விதமாக, விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு நவீன சோலார் விளக்குகள் வழங்கப்பட்டன. காய்கறி செடிகளில் தாக்கும் பூச்சி மற்றும் புழுக்களை கட்டுப்படுத்த, தோட்டக்கலைத் துறை மூலம் நவீன சோலார் விளக்குகள் விவசாயிகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இந்த சோலார் விளக்குகளை விவசாய நிலங்களில் பொருத்துவதன் மூலம், அதன் மீது படும் பூச்சிகள் இறந்து விளக்குகளின் கீழ் வைக்கப்பட்டுள்ள வாளியில் விழுந்துவிடும். இதனால், பயிர்களில் பூச்சித்தாக்குதல் கட்டுப்படுத்தப்படுவதாக தோட்டக் கலைத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் ஆண்டிப்பட்டியில், சோலார் விளக்குகள், இனக்கவர்ச்சி பொறி, பூச்சிகளை கவரும் மஞ்சள் அட்டைகள் உள்ளிட்ட உபகரணங்களை விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வழங்கினர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad