Header Ads

  • BREAKING



    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த 5 தமிழக மீனவர்கள் கைது.


    நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் 5 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து, நாட்டுப்படகையும் பறிமுதல் செய்தனர். தங்கச்சிமடத்தை சேர்ந்த மீனவர்கள் 5 பேர், பாம்பன் துறைமுகத்திலிருந்து நாட்டுப்படகில் நேற்றிரவு கடலுக்கு மீன்பிடிக்க சென்றுள்ளனர். நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, 5 மீனவர்களையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட மீனவர்கள் அபிஷேக், ஆண்டனி, ராஜ குணசேகரன், ஆரோக்கியம், சந்தியரமேசன் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் 5 பேரும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். நாட்டுப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர். இலங்கை கடற்படையினரால் தொடர்ந்து தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad