Header Ads

  • BREAKING



    ஸ்ரீநகரில் இன்று தொடங்குகிறது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்.


    நாடு முழுவதும் ஒரே சீரான வரிவிதிப்புக்கு வகை செய்யும் சரக்கு மற்றும் சேவை வரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டு விட்ட நிலையில், அதிகார வரம்பு நிர்ணயம் தொடர்பாக மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக ஜி.எஸ்.டி சட்டத்தை ஏப்ரல் முதல் நடைமுறைக்கு கொண்டுவர இயலாமல் போனது.
    ஜூலை மாதம் இதை அமலுக்கு கொண்டு வருவதற்கான பணிகள் விரைவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இதன் இறுதிக் கட்ட ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீநகரில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது. நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அந்தந்த மாநிலங்களின் முக்கிய அதிகாரிகளும், அமைச்சர்களும் பங்கேற்கின்றனர். இதில் பங்கேற்பதற்காக தமிழக நிதி அமைச்சர் ஜெயக்குமார் நேற்று ஸ்ரீநகர் புறப்பட்டுச் சென்றார்.கூட்டம் நடைபெறுவதை ஒட்டி ஸ்ரீநகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
    இதனிடையே ஜி.எஸ்.டி.யில் 5, 12, 18, மற்றும் 28 ஆகிய 4 கட்ட வரி விதிப்பு உள்ள நிலையில் காப்பீடு, செல்போன் கட்டணங்களுக்கு 5 சதவீதம் மட்டுமே வரி விதிப்பு இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் ஜி.எஸ்.டி.அமலுக்கு வந்த பின்னால் காப்பீடு மற்றும் செல்போன் சேவைகள் கட்டணம் குறைய வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. அதேவேளையில் கார்கள், புகையிலைப் பொருட்கள், பான் மசாலா, குளிர் பானங்களுக்க்கான வரி விதிப்பு 28சதவீதமாக இருக்கும்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad