சுங்க அதிகாரிகள் சோதனையில் 330 நட்சத்திர ஆமைகள் சிக்கின.
கோலாலம்பூர் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையின் போது சூட்கேசில் வைத்து கடத்த முயன்ற 330 நட்சத்திர ஆமைகள் சிக்கின. இதனை கைப்பற்றிய சுங்க அதிகாரிகள் மடகாஸ்கரில் இருந்து வந்த விமானத்தில் இவை கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். விமான பார்சல்களில் இவற்றை கற்கள் என்று பதிவு செய்த நபரை அவர்கள் தேடி வருகின்றனர். இவற்றின் மதிப்பு சுமார் 3 லட்சம் டாலர் என்று மதிப்பிடப்படுகிறது. மலேசியாவில் இருந்து இதர ஆசிய நாடுகளுக்கு இத்தகைய நட்சத்திர ஆமைகளின் கடத்தல் அதிக அளவில் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
கருத்துகள் இல்லை