Header Ads

  • BREAKING



    நாளை தொடங்குகிறது அக்னி நட்சத்திரம், 25 நாட்களுக்கு கடும் வெப்பம் நீடிக்க வாய்ப்பு.


    அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த மாதம் வெயில் கடுமையாக இருந்ததுடன், சில பகுதிகளில் அனல் காற்றும் வீசியது. கரூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகபட்சமாக 110 டிகிரி வெப்பம் பதிவானது. கோடையின் உச்சம் என்று கருதப்படும் அக்னி நட்சத்திரம் நாளை தொடங்கி 29-ஆம் தேதி முடிகிறது. இந்த நாட்களில் வழக்கத்தைவிட வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும், அனல் காற்றும் வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கடல் பகுதியில் இருந்து நிலப்பரப்புக்குள் காற்று நுழைவதால், வெப்பத்தின் தாக்கம் சற்று குறைந்து, ஈரப்பதமான காற்று வீசினாலும், அடுத்த இரு தினங்களில் இந்த நிலை மாறும் என்று வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்தனர். இதனிடையே, கோவை மாவட்டம் வால்பாறையில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த கன மழையால் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தேனி மாவட்டம் பெரியகுளம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்று பரவலாக மழை பெய்தது.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad