Header Ads

  • BREAKING



    தமிழகத்தின் பல ஊர்களில் கோடை மழை.


    சென்னை, மதுராந்தகம், உசிலம்பட்டி உள்பட தமிழகத்தின் பல ஊர்களில் கோடை மழை பெய்துள்ளதோடு, சூறாவளி காற்றும் வீசியது. கொளுத்தும் அக்னி நட்சத்திர வெயிலுக்கு இடையே செவ்வாய் கிழமை மாலையில், காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் .திருப்போரூர் .மாமல்லபுரம் . கல்பாக்கம் வட்டாரத்தில் சூறை காற்று.     தொடர்இடி மின்னல் கூடிய மழை பொழிந்தது. இதே போன்று மதுராந்தகம், காஞ்சிபுரத்தில் சுமார் ஒருமணி நேரத்திற்கு மழை பெய்து தீர்த்த து. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலும் கோடை இடியுடனும், சூறை காற்றுடனும் பலத்த மழை பெய்தது. சென்னையில் கிண்டி, பட்டினபாக்கம் உள்பட பல இடங்களிலும் மழை பெய்தது. இந்த மழையால் பகலில் நீடித்த வெப்பம் மெல்ல குறைந்தது

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad