Header Ads

  • BREAKING



    விவசாய நலன்கள் தொடர்பாக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு.



    விவசாய நலன்கள் தொடர்பாக அரசு செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    விவசாயிகள் தற்கொலையை தடுக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. ஏற்கனவே உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தமிழகத்தில் வறட்சி பாதிப்பால் விவசாயிகள் யாரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என தமிழக அரசு பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்திருந்தது. இந்நிலையில், இன்றைய விசாரணையின் போது, விவசாயிகள் உயிரிழப்பு ஏற்படும்போது தமிழக அரசு இழப்பீடு வழங்கி வருவதாக தமிழக அரசு சார்பில் விளக்கமளிக்கப்பட்டது. குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்தது. இதையடுத்து விவசாய நலன் தொடர்பாக செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து தமிழக அரசின் வேளாண் மற்றும் சட்டத்துறை செயலாளர்கள் அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிவாரணம் கிடைக்காத மற்றும் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் குடும்பத்தினர் உயர்நீதிமன்றத்தை அணுகலாம் எனவும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். வழக்கு விசாரணையை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Bottom Ad